Skip to main content

Posts

Featured

நமக்கு வெளியில் நமது நிகழ்ச்சி நிரல் - என்.சரவணனின் நேர்காணல் (ஆதவன்)

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியல் குழவில் இணைந்து தனது  எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் கடந்த 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை வெளிப்படுத்தி வந்த இவர் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தமிழ் இனி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இலங்கை வந்திருந்தார். இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர். புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்? தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படைஉரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின

Latest Posts

சரிநிகர் சரவணன் கட்டுரைகள்